ராஜஸ்தான்: அட்சய திருதியை நாளில் 15 ஆயிரம் திருமணங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

வடமாநிலங்களில் அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வதை புனிதமாக கருதுகிறார்கள்.;

Update: 2022-05-02 19:51 GMT
கோப்புப்படம்
வடமாநிலங்களில் அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வதை புனிதமாக கருதுகிறார்கள். 

ஜெய்ப்பூர், 

எந்தவொரு புதிய தொடக்கத்திற்கும் அட்சய திருதியை ஒரு நல்ல நாளாகக் கருதப்படுகிறது. வடமாநிலங்களில் அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வதை புனிதமாக கருதுகிறார்கள். திருமணம் செய்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்ற ஐதீகம் உள்ளது. எனவே, அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒரே இடத்தில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது. 

அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை அட்சய திருதியை நன்னாளில் சுமார் 15000 திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 3000 திருமணங்களுக்கான பந்தல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக, பந்தல் அமைப்பாளர் சங்க தலைவர் ரவி ஜிண்டால் கூறி உள்ளார். ஒட்டுமொத்தமாக நாளை 15,000 திருமணங்கள் நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற பெரிய அளவில் திருமணங்கள் நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்