ஒடிசாவில் அரசு அதிகாரியை தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது

ஒடிசா மாநிலம் தியோகர் விதான் சபா தொகுதியின் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வை சேர்ந்த சுபாஸ் சந்திரா.;

Update: 2022-05-01 23:46 GMT

புவனேஸ்வர், 

ஒடிசா மாநிலம் தியோகர் விதான் சபா தொகுதியின் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வை சேர்ந்த சுபாஸ் சந்திரா. இவர் தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பேசுவதற்காக தியோகர் மாவட்டத்தின் வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்துக்கு சென்றார்.

ஆனால் அவர் சென்றபோது அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி இல்லை. இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி எங்கு இருக்கிறார் என்பதை விசாரித்து அங்கு சென்ற எம்.எல்.ஏ. சுபாஸ் சந்திரா தனது உதவியாளர்களுடன் சேர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த வட்டார வளர்ச்சி அதிகாரி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ. சுபாஸ் சந்திரா மற்றும் அவரின் உதவியாளர்கள் 2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்