மத்திய அரசின் புதிய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார்
மத்திய அரசின் வெளியுறவுத்துறைக்கான புதிய செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். டார்
புதுடெல்லி,
மத்திய அரசின் வெளியுறவுத்துறைக்கான புதிய செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் டெல்லியில் நேற்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
1988-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான வினய் மோகன் குவாத்ரா, இந்திய வெளியுறவுத்துறையில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றி உள்ளார். குறிப்பாக அமெரிக்கா, சீனா, கனடா, தென் ஆப்பிரிக்கா என பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளார்.
இதில் முக்கியமாக நேபாளத்துக்கான இந்திய தூதராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது பணிக்காலத்தில் நேபாளத்துடனான எல்லைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள வினய் மோகன் குவாத்ரா, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் வங்காளதேசம், பூடான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று முதல் 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.