தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: மராட்டிய சுகாதார மந்திரி

தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மராட்டிய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.

Update: 2022-05-01 14:59 GMT
கோப்புப்படம்
மும்பை,

மராட்டிய சுகாதார மந்திரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மாநிலத்தில் தற்போது முகக்கவசம் அணிவதை கட்டாயமாக அவசியமில்லை. ஆனால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். 

மாநிலத்தில் ஒருசில இடங்களில் தொற்று எண்ணிக்கை சிறிது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி முதல் மந்திரிகளுடனான கூட்டத்தில் கொரோனா நடவடிக்கைகளில் மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறினார். 

தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தேவையில்லை. ஆனால் வழக்குகள் அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதோடு, முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்