சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 18 ஆண்டு சிறை

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.;

Update: 2022-05-01 12:46 GMT
திருவனந்தபுரம்:

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ஒரு அமைப்பின் பள்ளி, கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராக, மத போதகர் தாமஸ் பரேக்குளம் (வயது 35) இருந்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு இங்கு தங்கியிருந்த 16 வயதான மாணவர்கள் 4 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

புகார் தொடர்பாக கொட்டாரக்கரை, புத்தூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து நடத்தினர். பின்னர் இந்தியதண்டனை சட்டம் 377- உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மத போதகர் தாமஸ் பரேக்குளம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை கொல்லம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார்.

இதில் 3 வழக்குகளில் போதகர் தாமஸ் பரேக்குளத்துக்கு தலா 5 ஆண்டுகளும், இன்னொரு வழக்கில் 3 ஆண்டுகளும் என மொத்தம் 18 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

அதோடு 4 வழக்குகளிலும் தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். தொகையை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என மாவட்ட சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்