வட கிழக்கு மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சி: பிரபல அமைப்பு போர்க்கொடி..!!

வட கிழக்கு மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சிக்கு பிரபல அமைப்பு போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

Update: 2022-05-01 01:40 GMT
கோப்புப்படம்
அகர்தலா, 

வட கிழக்கு மாநிலங்ளில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடம் ஆக்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதை ஆர்.எஸ்.கே.சி. என்று அழைக்கப்படுகிற திரிபுராவில் பிரபலமான 56 பழங்குடி சமூக கலாசார அமைப்புகளின் சம்மேளனம் கடுமையாக எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் பிகாஷ் ராய் டெபர்மா, அகர்தலாவில் நிருபர்களிடம் பேசுகையில், “எங்கள் அமைப்பு இந்தியையோ, தேவநாகிரியையோ (இது சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறை) எதிர்க்கவில்லை. ஆனால், வட கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக திரிபுராவில் இந்தியையும், தேவநாகரியையும் வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் கடுமையாக எதிர்க்கிறது” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “மொழி என்பது மாநில பட்டியலில் உள்ளது. அப்படி இருக்கும்போது இந்தியை வட கிழக்கில் கட்டாயம் ஆக்குவது, அரசியல் சாசனத்தில் இருந்து அப்பட்டமாக விலகிச்செல்வதைத் தவிர வேறில்லை. மத்திய அரசு, தேவநாகரியை அவர்களின் விருப்பத்துக்கோ, விருப்பத்துக்கு எதிராகவோ எந்த மொழியினருக்கும் உத்தரவிடவோ, திணிக்கவோ முடியாது. மொழியைத் தேர்வு செய்யும் உரிமை என்பது அரசியல் சாசனத்தின் உத்தரவாதம். அதைப்பறிக்க முடியாது” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்