கலவரக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதே காங்கிரசின் வழக்கம்- பசவராஜ் பொம்மை

டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-;

Update: 2022-04-30 21:08 GMT
உப்பள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கலவரத்தின் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதுடன், பொதுச்சொத்துகளையும் கலவரக்காரர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கலவரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பேசி இருப்பது பற்றி என்னுடைய கவனத்திற்கும் வந்தது. இதற்கு முன்பும் பெங்களூருவில் நடந்த கலவரத்தின் போது, கலவரக்காரர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு அளித்திருந்தனர். கலவரக்காரர்களுக்கு ஆதரவு அளிப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவாகும். 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 3-ந் தேதி பெங்களூருவுக்கு வருகிறார். எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகளை தடை செய்வது குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தப்படாது. அந்த அமைப்புகள் நாடு முழுவதும் இருக்கிறது. கர்நாடகத்தில் அந்த அமைப்புகளின் செயல்களை கண்காணித்து, அதன் மீது கர்நாடக உள்துறை நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்