மதம், ஜாதியின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது - சரத் பவார்

மக்களின் பிரச்சினைகளான பணவீக்கம், உணவு, வேலையின்மை விவகாரத்தில் யாரும் கவனம் செலுத்துவதில்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-30 17:38 GMT
மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் சரத் பவார் பேசுகையில், மதம், ஜாதியின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல கடந்த சில நாட்களாக முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் என்ன? பணவீக்கம், உணவு, வேலையின்மை. இந்த விவகாரங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை.

நீங்கள் இன்று டி.வி-யை ஆன் செய்தீர்கள் ஆனால் சிலர் நாங்கள் சபை கூட்டம் நடத்துவோம் என்கிறார்கள் சிலர் அனுமன் மந்திரம் கூற வேண்டும் என்கிறார்கள். இந்த கேள்விகள் அனைத்தும் உங்கள் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை தருமா? ஆகையால், இதை எதிர்த்து போராட நாம் ஷாகு மகாராஜா, அம்பேத்கர் வழியை பின்பற்ற வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்