மராட்டியத்தில் மேலும் 155- பேருக்கு கொரோனா- ஒருவர் உயிரிழப்பு

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 155- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-30 14:28 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 155- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 77 ஆயிரத்து 732- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 843- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 998- ஆக உள்ளது. மராட்டியத்தில் நேற்று 148- பேருக்கு தொற்று அதிகரித்து இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 155- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 135 பேர் குணம் அடைந்துள்ளனர்.  மாநிலத்தில் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 98.11 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.87 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் செய்திகள்