பிரதமர் மோடியுடன் கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் சந்திப்பு

கோவாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பிரதமரிடம் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்தார்.;

Update: 2022-04-29 15:56 GMT
புதுடெல்லி,

கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பிரமோத் சாவந்த் இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது கோவாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த தகவலை பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோவா முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த், பிரதமர் மோடியை சந்திப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்