கேரளா: மலை பாதையில் பைக் மீது உருண்டு விழுந்த பாறை... ஒருவர் பலி

மலைப்பாதையில் உருண்டு வந்த பாறை ஒன்று சென்றுகொண்டிருந்த பைக்கின் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-04-29 14:45 GMT
திருவணந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள் மூன்று பைக்கில் வயநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மலைப்பாதை வழியாக அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, மலைப்பகுதிக்குள் இருந்து உருண்டு வந்த பாறை ஒன்று பைக்கின் பக்கவாட்டின் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்த இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதையடுத்து படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அபினவ் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்