புனித் ராஜ்குமாரின் உருவப்படத்தை சாட்சியாக வைத்து திருமணம் செய்த ரசிகர்..!

சிக்கமகளூர் அருகே புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் அவரது உருவப்படத்தை சாட்சியாக வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-29 09:45 GMT
கர்நாடகா:

சிக்கமகளூர் எம்ஜி ரோட்டில் உள்ள அம்பேத்கர் பவனில் வினைய் மற்றும் சுப்ரித்தா ஆகிய இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 

இந்த நிலையில் திருமணத்திற்கு வந்தவர்கள் ஐயர் வந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கு திருமண ஜோடிகளின் கட்அவுட்களுக்கு பதிலாக மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமாரின் கட்அவுட்களே காட்சியளித்தன.

இதையடுத்து வினைய் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் என்பதால் அவர் திருமணத்திற்கு புனித்ராஜ்குமாரை வரவழைக்க வேண்டும் என எண்ணிருந்தார். மேலும் புனிராஜ்குமாரின் திரைப்படம் திரையிடப்பட்டால் முன்னோடியாக நின்று அவர் அனைத்து இடங்களிலும் கட்டவுட்டுகள் வைத்து அவரது பரம ரசிகராக இருந்து வந்தார். ஆனால் அவர் இறந்த துக்கம் தாலாமல் தவித்து வந்தார். 

இந்த நிலையில் புனித் ராஜ்குமாரை கடவுளாக நினைத்து தனது திருமணத்திற்கு முன்பு திருமண ஜோடிகள் முதலில் புனித் ராஜ்குமார் உருவப்படத்தை தொட்டு கும்பிட்டு பூக்கள் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உருவப்படத்திற்கு முன் குத்துவிளக்கை ஏற்றி, மணவறையில் அவரது போட்டோவை வைத்து தாலி எடுத்து புனிதராஜ்குமாரை சாட்சியாக தாலியை காண்பித்து எங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் எனக் கூறி இருவரும் வேண்டுதல் வைத்து வினைய் சுப்ரித்தா கழுத்தில் தாலி கட்டினார்.

பின்னர் அங்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மலர்கள் தூவியும் திருமண ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுபோன்ற வித்தியாசமான முறையில் நடந்த திருமணத்தை பார்த்து அங்கு வந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

மேலும் செய்திகள்