புதுச்சேரி: வகுப்பறையில் பொருட்களை சேதப்படுத்திய பள்ளி மாணவர்கள் - துணை சபாநாயகர் ஆய்வு...!

நெட்டப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேதப்படுத்திய பொருட்களை துணை சபாநாயகர் ராஜவேலு ஆய்வு செய்தனர்.

Update: 2022-04-28 07:02 GMT
நெட்டப்பாக்கம்,

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பிரிவில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்க முன்பு பள்ளி வகுப்பறையில் உள்ள மின் விசிறி, மின்விளக்கு போன்றவற்றை  மாணவர்கள் சேதப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இன்று காலை கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் துணை சபாநாயகர் ராஜவேலு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் சேதப்படுத்திய அறையை பார்வையிட்டு, மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதை கண்டறிந்தார்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்