மின் உற்பத்தி நிலையங்களுக்கு கூடுதலாக நிலக்கரி விநியோகம் - ரெயில்வே சாதனை!

மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டன.;

Update: 2022-04-26 01:06 GMT
புதுடெல்லி,

மின் உற்பத்தி நிலையங்களுக்கு கூடுதலாக 111 மில்லியன் டன் நிலக்கரி வழங்கி ரெயில்வே  சாதனை படைத்துள்ளது. கூடுதல் பெட்டிகள் மூலம் கொண்டு சென்று ரெயில்வே இதனை சாத்தியமாக்கியுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக நிலக்கரி போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரெயில்கள் மற்றும் பெட்டிகள் இயக்கப்பட்டன.

இதன்மூலம், ரெயில்வே நிர்வாகம் நிலக்கரி போக்குவரத்தை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த செப்.21 முதல் மார்ச்.22 வரை 32 சதவீதம் கூடுதல் நிலக்கரி கொண்டு சென்று சாதனை படைத்துள்ளது.

ரெயில்வே நிர்வாகம் நிலக்கரி போக்குவரத்தில் சாதனையாக, 111 மில்லியன் டன் அதிகரித்து மொத்தம் 653 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்