எங்கள் கட்சி ஐ பேக்குடன் தான் ஒப்பந்தம் போட்டு உள்ளது பிரசாந்த் கிஷோருடன் அல்ல- கேடி ராமராவ்

தெலுங்கான ராஷிடிரிய சமிதி ஐ பேக்குடன் தான் ஒப்பந்தம் போட்டு உள்ளது பிரசாந்த் கிஷோருடன் அல்ல என அக் கட்சியின் செயல் தலைவர் கேடி ராமராவ் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-25 05:16 GMT
Image Courtesy:FACEBOOK/KTR
புதுடெல்லி

தேர்தல் வியூக நிபுணர்  பிரசாந்த் கிஷோர்  2024 பொதுத் தேர்தலில்  காங்கிரஸ் கட்சியில் இனைய போவதாகவும் காங்கிரஸ் வெற்றி பெற வியூகங்கள் வகுத்து உள்ளதாகவும் கூறபட்டது.  இந்தற்கு மத்தியில் பிரசாந்த் கிஷோர் தெலுங்கானா ராஷிடிரிய சமிதி  தலைவரும் தெலுங்கானா முதல் மத்திரியுமான கே சந்திரசேகர்ராவுடன் ஐதராபாத்தில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி  உள்லார். இதற்கிடையில், தெலுங்கானா ராஷிடிரிய  சமிதி  ஞாயிற்றுக்கிழமை கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உறுதிப்படுத்தி உள்ளது.

ஒரு பேட்டியின் போது  தெலுங்கானா ராஷிடிரிய  சமிதி கட்சியின்  செயல் தலைவர் கேடி ராமராவ் இதனை  உறுதிப்படுத்தினார், ஆனால் இதற்கும் கிஷோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார். கிஷோர் பிரபலமாக அறியப்படுபவர் தான் நிறுவனர் ஆனால் அதை நடத்துபவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிஷோர் எங்களை ஐ பேக்  நிறுவனத்திற்கு  அறிமுகப்படுத்தினார், அது எங்களுடன் இணைந்து செயல்படுகிறது," என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது நாடு முழுவதும் பல கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி வரும் ஐ பேக்-ல்  இருந்து கிஷோர் விலகி கொண்டுள்ளதாக  கூறினார். "இது கிஷோர் உடன் மட்டும் அல்ல. நாங்கள் பலருடன் பலமுறை விவாதித்தோம். நாங்கள் சுனில் மற்றும் மற்றவர்களிடம் விவாதித்து உள்ளோம்  ஐ பேக்குடன்  தான் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று  கூறினார்.

மேலும் செய்திகள்