பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள்! - பிரதமர் மோடி

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2022-04-25 03:55 GMT
Image Source: Twitter @PMOIndia
புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்தார்.

நேற்று வெளியிடப்பட்ட பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அதிபர் இம்மானுவேல்  மேக்ரான் 58.8 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். 

இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள்!

இந்தியா-பிரான்ஸ் இடையேயான முறையான செயல் திட்ட கூட்டணியை ஆழப்படுத்தும் வகையில், நாம் இணைந்து பணியாற்றுவதை தொடர நான் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்