காஷ்மீரில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் திரண்ட மக்கள் கூட்டம்..!!

காஷ்மீரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ‘மோடி, மோடி’ என மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.;

Update: 2022-04-24 20:56 GMT
ஜம்மு, 

காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் யூனியன் பிரதேசம் முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த கூட்டத்தில் டோக்ரி மொழியில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். 40 நிமிடம் நீடித்த அவரது உரையை கூட்டத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ‘மோடி, மோடி’ என அவ்வப்போது கோஷமிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் ஆர்வத்துக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்குப்பின் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை காஷ்மீர் பார்த்து வருவதாக தெரிவித்தார். காஷ்மீரில் முதல் முறையாக உள்ளாட்சித்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க ஒத்துழைத்ததற்காகவும் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்