காஷ்மீர் குல்காம் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் - அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், நேற்று நடந்த சண்டை காரணமாக, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-04-24 03:23 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மீர்ஹாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று நடத்திய தேடுதல் வேட்டையில் , பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதனை தொடர்ந்து நடந்த என்கவுண்ட்டரில் மொத்தம் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  எனினும், தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காஷ்மீர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட  பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி தெரிவித்தார். மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏ.கே ரைபிள்கள், 7 ஏ.கே மெகசின்கள், 9 கையெறி குண்டுகள் உள்ளிட்ட குற்ற செயல் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவித்தார்.

இன்று பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், நேற்று நடந்த சண்டை காரணமாக, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்