காவலர் குடியிருப்பில் பெண் எஸ்.ஐ. தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்பு
காவலர் குடியிருப்பில் பெண் எஸ்.ஐ. தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் மோகன்கஞ்ச் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணிபுரிந்து வந்தவர் ரேஷ்மி (வயது 33).
ரேஷ்மி தான் பணிபுரியும் போலீஸ் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல இன்று பணி செய்துவிட்டு மதியம் காவலர் குடியிருப்புக்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ரேஷ்மி போலீஸ் நிலையத்திற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் ரேஷ்மி தங்கியுள்ள காவலர் குடியிருப்பின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
வீட்டின் கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்துள்ளனர். அங்கு உள்ள ஒரு அறையில் ரேஷ்மி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் ரேஷ்மியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரேஷ்மி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது இது ஒரு கொலையா? இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.