“காஷ்மீர் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் மோடி அரசு வெற்றி அடைந்துள்ளது” - அமித்ஷா

காஷ்மீர் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மோடி அரசு வெற்றி அடைந்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.;

Update: 2022-04-22 17:52 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த 48-வது அனைத்து இந்திய காவல்துறை அறிவியல் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீரில் பயங்கரவாதம், வடகிழக்கில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகிய சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மோடி அரசு வெற்றியடைந்துள்ளது என்றார். 

பல ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளன என்றும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் உற்சாகம் மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்