ஜேசிபி வாகனத்தை இயக்கி அனைவரையும் மிரள வைத்த போரிஸ் ஜான்சன்! வைரல் வீடியோ

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன், அங்கு இருந்த ஜேசிபி வாகனம் ஒன்றில் ஸ்டைலாக ஏறி உட்கார்ந்தார்.;

Update: 2022-04-21 13:00 GMT
அகமதாபாத்,

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

பிரிட்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர் வந்தார். போரிஸ் ஜான்சனை குஜராத் முதல்-மந்திரி புபேந்திரபட்டேல், மாநில கவர்னர் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.

அகமதாபாத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான விஷயங்களை போரிஸ் ஜான்சன் இன்று கலந்துகொள்கிறார். அகமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போரிஸ் ஜான்சன் சில கலாசார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார். 

அந்த வகையில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அங்கு உள்ள ராட்டையை போரிஸ் ஜான்சன் சுழற்றி மகிழ்ந்தார். 

இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் உடன் குஜராத்தில் உள்ள பஞ்சமஹால் ஹலோல் ஜிஐடிசியில் உள்ள ஜேசிபி தொழிற்சாலையை பார்வையிட்டார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் 57 வயதான போரிஸ் ஜாண்சன், அங்கு இருந்த ஜேசிபி வாகனம் ஒன்றில் ஸ்டைலாக ஏறி உட்கார்ந்தார். அத்துடன் நிறுத்தாமல், அனைவரும் மிரளும் வகையில் ஜேசிபியை இயக்கி ஆச்சரியப்பட வைத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்