ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நெங்ரூ-வை பயங்கரவாதியாக அறிவித்தது மத்திய அரசு

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நெங்ரூ-வை பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Update: 2022-04-18 12:44 GMT
புதுடெல்லி,

தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அஷிக் அகமது நெங்ரூவை  பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் நெங்ரூ தீட்டியதகாகவும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த நெங்ரூவுக்கு 34 வயது ஆகிறது.  இவனது  அண்ணன் அப்பாஸ் அகமது நெங்ரூவும் பயங்கரவாதி ஆவான்.கடந்த 2013- ஆம் ஆண்டு  அப்பாஸ் அகமது நெங்ரூ கொல்லப்பட்டான்.  கடந்த 2020- ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை ஆஷிக் அகமது நெங்ரூ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியது. அதன்பிறகு நெங்ரூ மாயம் ஆனான். 

புல்வாமாவில் கடந்த  2013- ஆம் ஆண்டு போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்திலும் 2020- ஆம் ஆண்டு பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் நெங்ரூவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. நெங்ரூ பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதன் மூலம், அவனுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க முடியும். 

மேலும் செய்திகள்