அசாம் சாலை விபத்தில் 5 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

அசாம் மாநிலத்தின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.

Update: 2022-04-17 12:04 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டத்தில் நேற்று பிகு கலைஞர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வாகனத்தில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களுடைய வாகனம் கோஹ்பூர் அருகே  வந்துகொண்டிருந்தபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம்  டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்