அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் மோதல்: போலீஸ் உள்பட சிலர் காயம்
டெல்லி ஜஹான்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
டெல்லி ஜஹான்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்தது. சாலையின் இருபுறமும் நின்று மாறி மாறி கற்களை வீசி மோதிக்கொள்ளும் காசிகள் வெளியாகி பதைபதைக்க வைத்தன.
இதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் பாபு ஜெக்ஜிவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகர் டிசிபி அனேஷ் ராய் கூறுகையில், “ அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஊர்வலத்தின் கலந்து கொண்டவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றதாக சில தகவகள் கூறுகின்றன. மூத்த போலீஸ் அதிகாரிகள் நிகழ்விடத்தில் உள்ளனர். நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.