நடிகை பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சிகள் கசிந்த விவகாரம் - கேரள ஐகோர்டு அதிரடி உத்தரவு

நடிகை பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சிகள் கசிந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2022-04-16 15:44 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகை தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் கசிந்ததாக எழுந்த புகார் எழுந்தது. புகாரை அடுத்து நீதிமன்ற ஊழியர்களை விசாரிக்க குற்ற பிரிவு போலீசாருக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 

இதற்கிடையே இந்த வழக்கை முடிக்க மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வேண்டும் என்ற குற்றபிரிவு போலீசாரின் கோரிக்கையை ஐகோர்ட்டு பரிசீலித்து வருகிறது. 

விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில் திலீப்பின் ஜாமீனை ரத்துசெய்யக்கோரிய அரசு தரப்பு மனுவும் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்