குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்..!
குஜராத் மாநிலம் மோர்பியில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பாபு கேசவானந்த் ஆசிரமத்தில் 108 அடி உயர அனுமன் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையை இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அனுமன் வாழ்க்கையுடன் தொடர்புடைய நாட்டின் 4 திசைகளிலும் உள்ள ஊர்களில் அனுமன் சிலை உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. முதலில், வடதிசையில் சிம்லாவில் 2010-ம் ஆண்டு அனுமன் சிலை திறக்கப்பட்டது. மேற்கு திசையில், இந்த சிலை திறக்கப்படுகிறது.
தென்திசையில், ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை வைப்பதற்கான பணி தொடங்கி உள்ளது.