அருணாசல பிரதேசத்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-04-15 02:58 GMT

பாங்கின்,



அருணாசல பிரதேசத்தின் பாங்கின் நகரில் இருந்து வடக்கே 1,176 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.56 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்