அமெரிக்காவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருத்துவ பரிசோதனை நிறுத்திவைப்பு

கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து வினியோகித்து வருகின்றனர்.

Update: 2022-04-14 20:25 GMT
ஐதராபாத், 

இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து வினியோகித்து வருகின்றனர். இந்த தடுப்பூசி, இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி நடைமுறைகள் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்பூசி வினியோகத்தை உலக சுகாதார அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் 2/3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகம் (எப்டிஏ) நிறுத்தி வைத்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவிலும், கனடாவிலும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டாளியாக உள்ள ஆகுஜென் நிறுவனம் கூறும்போது, “பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளை மதிப்பீடு செய்யும்வகையில், நாங்களே தாமாக முன்வந்து தற்காலிகமாக பரிசோதனைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்ததின் விளைவுதான் இது” என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்