தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளை தரட்டும் - பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-14 03:52 GMT
புதுடெல்லி,

சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.  ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது.

தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளான இன்று தமிழர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  
 
இதற்கிடையில், தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு. வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்