பஞ்சு இறக்குமதி மீதான சுங்கவரி ரத்து
தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 சதவீத அடிப்படை சுங்கவரியும், 5 சதவீத வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகின்றன.;
புதுடெல்லி,
தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 சதவீத அடிப்படை சுங்கவரியும், 5 சதவீத வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகின்றன. உள்நாட்டில் விலையைக் குறைக்கும்வகையில் இந்த வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு வந்தது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த முடிவால், ஜவுளித் தொழில்துறையும், நுகர்வோரும் பயனடைவார்கள் என்று கருதப்படுகிறது.