இந்தியாவில் தயாரான டோர்னியர்-228 ரக விமானத்தின் வணிக பயன்பாடு துவக்கம்

இந்தியாவில் தயாரான டோர்னியர்-228 ரக விமானம் அசாம்-அருணாச்சல பிரதேசம் இடையே வணிக ரீதியான பயணத்தை துவக்கியுள்ளது.

Update: 2022-04-13 00:17 GMT
திஸ்பூர்,

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானம் முதல் முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தை அசாமின் திப்ருகர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் இடையே அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்குகிறது. 

இது 17 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் ஆகும். இந்த ரக விமானங்களை பாதுகாப்பு படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமான சேவையின் துவக்க விழாவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பேமா காண்டு, அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்