திருப்பதியில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து..!

திருப்பதியில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-04-12 08:50 GMT
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோயில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்