குஜராத்; ரசாயன ஆலையில் வெடி விபத்து - 5 தொழிலாளர்கள் பலி!
குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.;
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் பருச் பகுதியில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் ஆலையில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விபத்து நடந்த இடத்தில் பணியாற்றிய ஒருவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், இந்த விபத்து பற்றிய விரிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.