படைவீரர்கள் பாசறைக்கு திரும்புவதை காண குஜராத் எல்லையில் சுற்றுலா முனையம் திறப்பு
இந்தியாபாகிஸ்தான் இடையிலான வாகா எல்லையில், இரு நாட்டு வீரர்களும் பாசறைக்கு திரும்புவதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் திரள்வது வழக்கம்.;
புதுடெல்லி,
இந்தியாபாகிஸ்தான் இடையிலான வாகா எல்லையில், இரு நாட்டு வீரர்களும் பாசறைக்கு திரும்புவதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் திரள்வது வழக்கம்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் நடபேட் எல்லையில் இதுபோன்ற சுற்றுலா முனையம் ரூ.125 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது முனையம் இதுவாகும்.
இதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று திறந்து வைத்தார். இந்த முனையம், பார்வையாளர்களிடயே தேசபக்தி உணர்வை ஊட்டும் என்று அவர் கூறினார்.
அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகளும், பள்ளி மாணவர்களும் கண்டு களிக்கலாம். தினமும் 20 ஆயிரம் பேர் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.