ஆந்திராவில் மந்திரிகளின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் கவர்னர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்தன்..!

ஆந்திராவில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மந்திரிகளின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

Update: 2022-04-10 14:33 GMT
கோப்புப் படம் ANI
ஐதராபாத்,

ஆந்திராவில், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து, அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. 

வருகிற 11-ம் தேதி, அமைச்சரவையை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில், புது முகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கவும், அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு வசதியாக, தற்போது மந்திரிகளாக உள்ள 24 பேரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முதல்-மந்திரி  ஜெகன்மோகன் ரெட்டியிடம் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். 

இந்த நிலையில் மந்திரிகளின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் நாளை காலை 11.30 மணியளவில் வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் பதவி ஏற்க உள்ளனர்.

மேலும் செய்திகள்