டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நாளை யோகா பெருவிழா கொண்டாட்டம்!

உலக சுகாதார தினத்தன்று செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் யோகா பெருவிழாவைக் கொண்டாடவிருக்கிறது;

Update: 2022-04-06 16:35 GMT
புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் 2015-ம் ஆண்டில் இருந்து சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார தினமான (நாளை)ஏப்ரல் 7 அன்று, டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா பெருவிழா கொண்டாடப்பட உள்ளது.

சர்வதேச யோகா தினத்திற்கு 75 நாட்களுக்கு முன் உலக சுகாதார தினமான ஏப்ரல் 7 அன்று, காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை டெல்லியில் உள்ள செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 பூங்கா பின்னணியில், யோகா பெருவிழா எனும் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  

இந்த  நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர்  ஓம் பிர்லா தலைமை விருந்தினராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள், பிரபல விளையாட்டு ஆளுமைகள், யோகா குருக்கள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் 8-வது சர்வதேச யோகா தினம்,  சுதந்திர தின 75வது ஆண்டுப்  பெருவிழாவையொட்டி நடைபெறுவதால், நாடு முழுவதும் உள்ள 75 முக்கியமான இடங்களில் யோகா தினத்தை நடத்த அமைச்சகம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்