கர்நாடகாவில் கார் மீது பஸ் மோதி விபத்து: தாய் மகன் பலி, 5 பேர் காயம்

கர்நாடகாவில் கார் மீது அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் தாய், மகன் இருவர் பலியாகினர்.;

Update: 2022-04-06 10:44 GMT
கோப்புப் படம்
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள சிர்குப்பி என்ற இடத்தில் கார் ஒன்றின் மீது பஸ் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தாய், மகன் இருவர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக ஐதராபாத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கர்நாடக அரசு பஸ் ஒன்று, ஹம்பியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் விபத்து குறிந்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஹூப்ளியில் உள்ள கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவன (கிம்ஸ்) மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்