ராஜஸ்தான்: பஸ் மீது மின்கம்பி உரசியதில் 3 பயணிகள் சாவு..!

ராஜஸ்தானில் பஸ் மீது மின்கம்பி உரசியதில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-04-05 21:52 GMT
ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் உள்ள குடா கிராமத்தில் நடைபெற்ற ஒரு கோவில் விழாவில் இருந்து பஸ் ஒன்று நேற்று திரும்பிக்கொண்டிருந்தது.

அந்த பஸ் ஜெய்சல்மீர்-சேலக் சாலையில் சென்றபோது மேலே தாழ்வாக சென்ற ஒரு மின்கம்பி பஸ் மீது உரசியது. அதனால், பஸ் பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் மின் அதிர்ச்சிக்கு உள்ளான 2 சகோதரர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்