உக்ரைன் விவகாரம்: மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் ஜெய்சங்கர்

உக்ரைன் மீதான விவாதத்திற்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை மக்களவையில் பதிலளிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-05 18:21 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதில் உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக லோக்சபா எம்.பி., பிரேம் சந்திரன், காங். எம்.பி. மணீஷ் திவாரி ஆகியோர் , அரசியலமைப்பு சட்டம் விதி 193-ன் கீழ் விவாதம் நடத்திட கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 15-ம் தேதி வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் உக்ரைன் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்