கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஒன்றுமை அவசியம் - சோனியாகாந்தி வலியுறுத்தல்

கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து எனக்கு பல ஆலோசனைகள் கிடைத்துள்ளது.;

Update: 2022-04-05 08:48 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை தேவை. இல்லை என்றால்  கட்சி பின்னடைவை சந்திக்கும். கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து எனக்கு பல ஆலோசனைகள் கிடைத்துள்ளது. அதனை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.

சமீபத்திய தேர்தல் முடிவுகளில் நீங்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். அவை அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளன.

நமது  அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு, நமது  உறுதியான மனப்பான்மை ஆகியவை கடுமையான சோதனைக்கு உட்பட்டுள்ளன.

நமது கட்சி  அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை மிக முக்கியமானது, அதை உறுதிப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய நான் உறுதியாக இருக்கிறேன்.

முன்னோக்கி செல்லும் பாதை  முன்பை விட மிகவும் சவாலானது, நமது  மறுமலர்ச்சி என்பது நமக்கு மட்டும் முக்கியமான விஷயம் அல்ல .  உண்மையில், இது நமது ஜனநாயகத்திற்கும் உண்மையில் நமது சமூகத்திற்கும் அவசியம் என்று கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்