பணமோசடி வழக்கு: மந்திரி நவாப் மாலிக் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரி நவாப் மாலிக் நீதிமன்ற காவல் 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-04 20:21 GMT
மும்பை,

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. இதில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாவூத் இப்ராகிம் தொடர்புடையவர்களிடம் நிலம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கை கடந்த 23-ந் தேதி கைது செய்து விசாரித்து வந்தது. பின்னர் மார்ச் 7-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கடந்த 21-ந் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து அவரது காவல் 4-ந் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று அவர் பணமோடி தடுப்பு சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட்டு அவரது நீதிமன்ற காவலை வருகிற 18-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து மந்திரி நவாப் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்