மராட்டியத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
மராட்டியத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மும்பை,
மராட்டிய மாநிலம், லகாவித்-தேவ்லாலி இடையே எல்டிடி-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தது. இந்த ரெயில் நாகிக் நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
ரெயில் தடம்புரண்டதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட 3 ரெயில்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விபத்து குறித்து ரெயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.