மராட்டியத்தில் ஜெய்நகர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து

மராட்டியத்தின் நாசிக் அருகே ஜெய்நகர் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் இன்று மாலை தடம் புரண்டன.

Update: 2022-04-03 11:26 GMT




நாசிக்,


மராட்டியத்தின் நாசிக் நகர் அருகே லஹாவிட் மற்றும் தேவ்லாலி இடையே சென்று கொண்டிருந்த 11061 என்ற எண் கொண்ட எல்.டி.டி-ஜெய்நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை 15.10 மணியளவில் திடீரென தடம் புரண்டது.

இதில் ரெயிலில் இருந்த சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து புரண்டன.  இதனை அடுத்து சம்பவ பகுதிக்கு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடோடி சென்றனர்.  ரெயில்வே நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, விபத்து நிவாரண ரெயில் மற்றும் மருத்துவ வேன் ஆகியவை சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றன.  இதனை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.  ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.

மேலும் செய்திகள்