திருப்பதி: பெண்கள் பாதுகாப்பிற்காக புதிய ஆட்டோ அறிமுகம்.

திருப்பதியில் முதல் முதல்முறையாக பெண்கள் பாதுகாப்புக்காக இளம் சிவப்பு நிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Update: 2022-04-03 05:58 GMT
திருப்பதி,

ஆந்திர மாநிலம், திருப்பதியில் முதல்முறையாக பெண்கள் பாதுகாப்புக்காக இளம் சிவப்பு நிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இளம் சிவப்பு நிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த இளம் சிவப்பு நிற ஆட்டோக்களை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே ஓட்டுகின்றனர். இதற்காக திருப்பதியில் மட்டும் 350 பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்காக லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது 150 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பதி பஸ் நிலையம், ரோயா ஆஸ்பத்திரி, மகளிர் யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆட்டோ நிறுத்தங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்