ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகள் மூலம் பதிலடி- உத்தவ் தாக்கரே

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகளால் பதிலடி கொடுக்கிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Update: 2022-04-02 20:48 GMT

குழப்பம் இல்லை

மும்பை வடலா பகுதியில் கட்டப்பட உள்ள ஜி.எஸ்.டி. பவன் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்குள் குழப்பம் எதுவுமில்லை. இந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி தரையில் தனது காலை உறுதியாக நிலை நிறுத்தி மாநிலத்தின் மேம்பாடு, வளர்ச்சிக்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மகாவிகாஸ் அகாடி அரசு வளர்ச்சி பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.




வளர்ச்சி பணி மூலம் பதிலடி

பலமுறை அறிவிப்புகள் வெளியாகி அடிக்கல் நாட்டப்படும். ஆனால் அதற்கு மேல் எதுவும் நடைபெறாது. ஆனால் நாங்கள் அடிக்கல் நாட்டிய நாளில் இருந்தே பணியை தொடங்குகிறோம். அதுதான் முக்கியம். 2025-ல் ஜி.எஸ்.டி. பவன் கட்டுமான பணிகள் முடிவடையும். மாநில அரசை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகள் மூலம் மகாவிகாஸ் கூட்டணி பதிலடி கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்