தமிழகத்திற்கான ரூ.20.86 ஆயிரம் கோடி நிலுவை தொகையை விடுவித்திடுக - நிதி மந்திரியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத்தொகை உள்பட 20.86 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய நிதி மந்தியிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.

Update: 2022-04-01 07:54 GMT
புதுடெல்லி,

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். 

அவர் நேற்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.

இந்நிலையில், தனது டெல்லி பயணத்தின் 3-வது நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவை தொகை 13 ஆயிரத்து 504 கோடி ரூபாய் உள்பட 20 ஆயிரத்து 860 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என அவர் மத்திய நிதி மந்திரியிடம் கூறினார்.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் மத்திய நிதிமந்திரியிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.  

நிதி மந்திரி நிர்மலா சீதாரமானுடனான இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்