மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 113 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 113 புள்ளிகள் உயர்ந்து லாப நோக்குடன் இன்று காணப்பட்டது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 112.61 புள்ளிகள் உயர்ந்து அல்லது 0.19 சதவீதம் லாபத்துடன் 58,681.12 புள்ளிகளாக இருந்தது.
இதேபோன்று நாட்டிலுள்ள மிக பெரிய இந்திய நிறுவனங்களில் தேசிய பங்கு சந்தையில் இடம் பெற்று முதல் 50 இடங்களை பிடிக்கும் நிறுவனங்களின் சராசரி குறியீட்டை பிரதிபலிக்கும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு ஆனது இன்று 37.35 புள்ளிகள் உயர்ந்து அல்லது 0.21 சதவீதம் லாபத்துடன் 17,502.10 புள்ளிகளாக இருந்தது.
வார இறுதியில், லாபத்துடன் பங்கு சந்தைகள் இன்று தொடங்கியுள்ளதனால் முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு வர்த்தகர்கள் அதிகளவில் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.