டெல்லியில் மேலும் 123- பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-30 14:27 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவில் இருந்து 106  பேர் குணம் அடைந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 459- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 24,706- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 0.50 சதவிகிதமாக உள்ளது. 

மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று  38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றில் இருந்து மேலும்  57 பேர் குணம் அடைந்துள்ளனர். புதிதாக உயிரிழப்பு இல்லை. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 292 ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்