ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியா வருகிறார்

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியா வருகிறார்.;

Update: 2022-03-30 10:33 GMT
புதுடெல்லி,

ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி  செர்ஜி லாவ்ரோவ்  அரசு முறை பயணமாக  நாளை  இந்தியா வருகிறார். சீனாவுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு லாவ்ரோவ் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய மந்திரியின் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்