மனிதநேயம் எங்கே? மாற்று திறனாளி மீது கொடூர தாக்குதல் - பத பதவைக்கும் வீடியோ

சொத்து தொடர்பான தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2022-03-30 05:07 GMT
Image Courtesy: NDTV
நொய்டா,

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில் மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய 3 சக்கர ஸ்கூட்டரில் அமர்ந்துள்ளார்.

அவரை சுற்றிவளைத்த ஒரு ஆணும், பெண்ணும் பெரிய கட்டையை கையில் வைத்துக்கொண்டு அவரை சரமாறியாக தாக்குகின்றனர். கட்டையால் மாற்றுத்திறனாளியின் பைக்கை அடித்து நொறுக்குகின்றனர்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இது காட்டுமிராண்டுத்தனம் என்றும், மனிதநேயம் எங்கே என்றும் பலரும் கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர்.

தாக்கப்பட்ட நபரும், அந்த மாற்றுத்திறனாளியும் உறவினர்கள் என்றும், சொத்து தொடர்பான தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்